வியாழன், 24 ஜனவரி, 2013



         புத்தாண்டே  வருக!


தமிழாண்டே தமிழாண்டே

              தைமுதலில் வருமாண்டே

அமிழ்தாக உருவெடுத்து

               அவனிபோற்ற வருமாண்டே
    

பரணிபாடும் எங்களினம்
   
                பால்பொங்கல் வைத்திடவே

தரணியெங்கும் வளம்கொழித்து

                 தைமுதலில் வந்தாயே