புத்தாண்டு வருகுதுபார்
புத்தாண்டு வருகுதுபார் – தமிழ்
புத்தாண்டு வருகுதுபார்
முத்தான ‘தை’யினிலே – தமிழ்
முடிசூடி வருகுதுபார்
எண்ணமதில் குடிகொண்ட – உயர்
இனியதமிழ்ப்
பாட்டோடு
பண்பாட்டுப் பெட்டகமாய் – தைப்
பொங்கலன்று வருகுதுபார்
நன்செய்யுள் திருக்குறளை – உயர்
நாடுபோற்ற செய்ததமிழ்
பொன்னாண்டைக் கூட்டியிங்கு – உயர்
புதுப்பொலிவு தருகுதுபார்
கன்னித்தமிழ் வையகத்தில் – உயர்
கலைகள்பல கொண்டிங்கு
வண்ணத்தமிழ்ப் புத்தாண்டாய் – உயர்
வையகத்தில் வருகுதுபார்
நன்னாளாம் புத்தாண்டில் – உயர்
நல்லவர்கள் வாழ்த்திடவே
என்னாளும் பொன்னாளாய் – உயர்
ஏற்றமுடன் வருகுதுபார்
பொன்.
கணேசுகுமார்
சிங்கப்பூர்.