வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

       தைப் புத்தாண்டு

தமிழா தமிழா உணர்ந்திடு
       தைதான் நமக்கு  புத்தாண்டு
குமிழாய் போன ஆண்டொன்றை
      குறித்து நீயும்  கலங்காதே
அமிழ்தாய் இனிக்கும் பொங்கலை
        அள்ளிக் கொடுத்து மகிழ்ந்திட
உமியை கலைந்த புத்தரிசி
          உலையில் இட்டு பொங்கிடு

கன்னல் கரும்புச் சாற்றைநீ
        கனிவாய் சுவைக்கக் கொடுத்திடு
இன்னல் நீங்கி மகிழ்ந்திட
         இன்றே முடிவை எடுத்திடு
நன்னாள் தையில் அனைவரும்
         நலமாய் வாழச் சொல்லியே
அன்னைத் தமிழைக் கொண்டுநீ
          அனைவரும் வாழ வாழ்த்திடு


                                     பொன். கணேசுகுமார்.

                 

1 கருத்து:

  1. வாழ்த்துக்கள்...
    இணையத்தளத்தில் உங்களின் படைப்புகளை அதிகமாகக் காண ஆவலாய் உள்ளேன். பாரதியார், பாரதிதாசன் காலங்கள் முடிந்து, கண்ணதாசன் காலம் மலர்ந்து வைரமுத்து, பா.விஐய் என போய்க்கொண்டிருக்கும் இன்றையக் காலக்கட்டத்திற்கு ஏற்ற புதிய பார்வையில், புதியக் கோணத்தில் உங்களின் கவிதைகளைத் திசை திருப்பினால் எழுத்திலே ஓர் எழுச்சியும், உத்வேகமும் வரும்...உங்களின் கவிதைகளைப் புதியப் பாதையில் திருப்புங்கள்

    பதிலளிநீக்கு