வாழ்த்து 2
கற்றல் பாடம் உருவாக்கும்
கல்வி அமைச்சுப் பணியினிலே
பெற்றுக் கொண்டப் பொறுப்புகளைப்
பெரிதாய் எண்ணிச் செய்தவராம்
வெற்றுப் பேச்சை விட்டொழித்து
வேலை செய்யும் இடத்தினிலும்
வெற்றி என்றக் குறிக்கோளே
வேண்டும் நமக்கு என்றவராம்
உற்றத் தோழர் யாவருக்கும்
உரித்தாய் உதவி புரிந்தாலும்
கற்றுத் தெளிந்தக் கல்வியினைக்
கருத்தில் கொண்டு வாழ்பவராம்
நற்றாய் அன்பைப் போன்றிங்கு
நமக்கு அளித்து வாழ்ந்தாலும்
சற்றும் கடமை தவறாது
சமமாய் மதித்து நடப்பவராம்
அருமை பெருமை பேசாது
அன்பு ஒன்றைக் கொண்டவராம்
இருமை இல்லா இடமாக
இன்றும் பணியைச் செய்வபராம்
வறுமை இல்லா மனத்தினிலே
வாழும் கலையைச் சொன்னவராம்
பொறுமை என்றச் சொல்லுக்குப்
பொருந்தி வாழக் கற்றவராம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக