2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்தபோது எழுதியது
' ஓ ' தமிழா !
பண்பாட்டு பெருமையோடு
பார்போற்ற வாழ்ந்தகுலம்
புண்பட்டுக் கிடக்குதுபார்
புழுங்கிமனம் துடிக்குதுபார்
எண்ணற்ற இழப்புகளை
எம்தமிழர் பெற்றிடினும்
விண்ணதிர வேட்டுகளை
வேசிமகன் வெடிக்கின்றான்
கையிழந்து காலிழந்து
கட்டுமனை தானிழந்து
வெயிலிலே காய்கின்றார்
வெந்தணலில் எரிகின்றார்
சீறும்புலி யிருக்கநம்
சின்னஞ்சிறு பிஞ்சுகளை
போரென்று வதைக்கின்றான்
புலிகண்டு பதைக்கின்றன்
கண்ணெதிரே நடக்கின்ற
கயவாளி மூர்க்கத்தை
கண்ணற்ற குருடன்போல்
காந்திதேசம் பார்க்குதுபார்
' ஓ ' தமிழா !
பண்பாட்டு பெருமையோடு
பார்போற்ற வாழ்ந்தகுலம்
புண்பட்டுக் கிடக்குதுபார்
புழுங்கிமனம் துடிக்குதுபார்
எண்ணற்ற இழப்புகளை
எம்தமிழர் பெற்றிடினும்
விண்ணதிர வேட்டுகளை
வேசிமகன் வெடிக்கின்றான்
கையிழந்து காலிழந்து
கட்டுமனை தானிழந்து
வெயிலிலே காய்கின்றார்
வெந்தணலில் எரிகின்றார்
சீறும்புலி யிருக்கநம்
சின்னஞ்சிறு பிஞ்சுகளை
போரென்று வதைக்கின்றான்
புலிகண்டு பதைக்கின்றன்
கண்ணெதிரே நடக்கின்ற
கயவாளி மூர்க்கத்தை
கண்ணற்ற குருடன்போல்
காந்திதேசம் பார்க்குதுபார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக