கொரோனாவும் பொருளாதாரமும்
ஆணென்றும்
பெண்ணென்றும் அளவீடு காட்டாது
அண்டங்கள் எங்கெங்கும் அலைபோலே ஆர்பரித்து
மானிடரின்
உயிர்மூச்சை மறிக்கின்ற கொரோனாவும்
மறுபடியும் மறுபடியும் மாலாது தோன்றியதால்
காணுகின்ற
இடமெல்லாம் கட்டுமானத் தொழிலோடு
கலத்தொழிலும் கைத்தொழிலும் கைநழுவி நடுநடுங்க
தூணாக
எண்ணுகின்ற துறைசார்ந்த பொருளியலும்
துரும்பாகத் தேய்ந்திங்குத் துன்பத்தில் ஆழ்த்தியதே!
தொற்றென்னும்
துர்க்கிருமி தொந்திரவு செய்தபோது
தொழிலற்றுத் துன்புற்று வருந்தியோர்கள் பலருண்டு
பற்றில்லா
பந்தத்தின் பாசாங்கு வார்த்தைகளோ
பசியாற்ற முடியாமல் பயனற்றுப் போனதனால்
பெற்றுள்ள
படிப்பினைகள் பிழைப்பிற்கு வழிசொல்ல
பேரில்லாப் பேற்றினையே பெற்றிடாமல் பிரிந்துநின்று
கற்றவரைத்
தொழில்நுட்பம் கரைசேர்க்க எண்ணினாலும்
கல்லாத மானிடர்முன் தோற்றேதான் போனதிங்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக