படிப்பினை
நேற்றுமுதல் இன்றுவரை நெருக்கடிகள்
வந்தாலும்
நிலையில்லா நிம்மதிதான் நெஞ்சமதில்
சூழ்ந்தாலும்
தூற்றுவோர்தம் துவேசங்கள்
துளைபோலத் துளைத்தாலும்
துரத்துகின்ற தொல்லைகள் தொடர்ந்தெம்மைத்
தாக்கினாலும்
ஏற்றமில்லா வாழ்க்கைதான்
எங்கெங்குச் சென்றாலும்
எல்லையில்லாத்
துன்பத்தில் எதிர்நீச்சல் போட்டாலும்
மாற்றமில்லா நல்வாழ்வில்
மனிதமென்ற மெய்ம்மையினை
நேற்றுமுதல் இன்றுவரை
நெருக்கடிகள் வந்தாலும்
தூற்றுவோர்தம் துவேசங்கள்
தொடர்ந்தெம்மைத் தூற்றினாலும்
ஏற்றமுற வாழ்வதற்கு
எதிர்நீச்சல் போட்டிடுவேன்
மாற்றமில்லா நல்வாழ்வை
மனதளவில் கற்றிடுவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக