திங்கள், 31 அக்டோபர், 2011

புத்தகம்

                           புத்தகம்

புத்தகம் நல்ல புத்தகம்
              புதிய புதிய புத்தகம்
நித்தம் வந்து குவியுதாம்
              நம்ம ஜிஜிஎஸ் கடையிலே

அம்மா அப்பா இருவரும்
             ஆசை யோடு வாங்கியே
நமக்குக் கொடுக்கும் புத்தகம்
              நல்ல தமிழ்ப் புத்தகம்

சிறுவர் முதலாய் பெரியவர்
              சிறப்பாய் படிக்கும் புத்தகம்
அருமை யான முறையிலே
              அடுக்கி யுள்ள புத்தகம்

பள்ளி பிள்ளைகள் யாவரும்
              படித்து பயிற்சி செய்திட
நல்ல நல்ல புத்தகம்
               நாளும் கிடைக்கும் வாருங்கள்









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக