புதுமையுடன் பொங்கிடுக!
வித்தாக விதைத்திட்ட
விதைகளெல்லாம் விளைந்திங்கு
முத்தான மகசூலாய்
மூலையிலே குவிந்திடவே
புத்துணர்வும் புதுப்பொலிவும்
புன்முருவல் பூப்பதற்குப்
புத்தாண்டாய்த் தையொன்றில்
பிறக்கின்ற பூமகளே!
எங்குமுள்ளோர் இன்னலின்றி
இன்பமுடன் வாழ்ந்திடவும்
எங்குமில்லா ஏற்றத்தை
என்றென்றும் பெற்றிடவும்
செங்கதிரோன் சீர்செய்யும்
சிறப்பான தைநாளில்
பொங்குகின்ற பொங்கலாய்நீ
புதுமையுடன் பொங்கிடுக!
இப்படிக்கு
என்றும் அன்புடன் ...
கணேசுகுமார் பொன்னழகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக