சனி, 17 ஏப்ரல், 2021

 

"தமிழர் மரபும் பண்பாடும்"

 

பரணி பாடும் வீரத்தில்

பாரோர்  புகழ வாழ்ந்தயினம்

தரணி யெங்கும் போற்றுகின்ற

தமிழர் மரபும் பண்பாடும்

வரமா யிங்கு வாய்த்ததனால்

வளமும் நலமும் பெற்றதோடு

பரதம் பாட்டு இசைகளிலும்

பாங்காய் விளங்கும் தமிழரினம்

 

வணங்கும் தெய்வக் கோவிலிலும்

வடித்தல் வரைதல் கலையோடு

பணய மில்லா நோக்கத்தில்

படித்தல் நடித்தல் கலையினையும்

வணக்கம் கூறி வரவேற்று

விருந்து படைக்கும் பண்பினையும்

இணக்க மோடு கடைப்பிடித்து

இன்றும் வாழும் தமிழரினம்

 

கணேசுகுமார் பொன்னழகு

சிங்கப்பூர்

தேதி 17.04.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக