ஞாயிறு, 8 ஜனவரி, 2012

புத்தாண்டு வருகுதுபார்

புத்தாண்டு வருகுதுபார்தமிழ்
                புத்தாண்டு வருகுதுபார்
முத்தானதையினிலேதமிழ்
                முடுசூடி வருகுதுபார்

                எண்ணமதில் குடிகொண்டஉயர்                   
இனியதமிழ்ப் பாட்டோடு
                பண்பாட்டுப் பெட்டகமாய்தைப்
                                பொங்கலன்று வருகுதுபார்

                நன்செய்யுள் திருக்குறளைஉயர்
                                நாடுபோற்ற செய்ததமிழ்
பொன்னாண்டை கூட்டியிங்குஉயர்
புதுப்பொலிவு தருகுதுபார்

                கன்னித்தமிழ் வையகத்தில்உயர்
                                கலைகள்பல கொண்டிங்கு
                வண்ணத்தமிழ் புத்தாண்டாய்உயர்
                                வையகத்தில் வருகுதுபார்

                நன்னாளாம் புத்தாண்டில்உயர்
                                நல்லவர்கள் வாழ்த்திடவே
                என்னாளும் பொன்னாளாய்உயர்
                                ஏற்றமுடன் வருகுதுபார்

                                                                              பொன்.கணேசுகுமார்                                                                                     
                                                                                           சிங்கப்பூர்

1 கருத்து:

  1. இப்படியே சொந்தமா ஏதாவது சொல்லி நம்பள தேத்திக்க வேண்டியதுதான்....

    கவிதை அருமையோ அருமை.
    வருடா வருடம் தைப்பொங்கலுக்க மட்டும் தமிழையும் புத்தாண்டையும் மட்டும் எழுதாமல் இங்கு வாழ் தமிழர்களின் வாழ்க்கை நிலையினையும் அவர்கள் எதிர்கொள்ளும் சமகால வாழ்வியல் சிக்கல்களையும் முன்நிறுத்தி கவிதைகளைப் படைத்தல் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு