செவ்வாய், 15 ஜனவரி, 2019

இயற்கையினை வணங்கிடுவோம்!

பாத்திகட்டிப் பயிர்வளர்த்துப்
பக்குவமாய்ப் பலன்பார்த்துக்
கூத்தோடு குலவையிட்டுக்
கும்பிடும்தைத் திருநாளாம்

நாற்றுகொண்டு நடவுநட்டு
நல்லதொரு விளைச்சலீட்ட
ஏற்றதொரு  வாய்ப்புதந்த
இயற்கைக்கு நன்னாளாம்

ஏர்பிடித்துக் குலம்காக்கும்
எங்களின உழவருக்கும்
பார்போற்ற புகழ்பாடிப்
பொங்கலிடும் பொன்னாளாம்

இனியதமிழ்ச்  சான்றோரும்
இரக்கமுள்ள ஆன்றோரும்
இன்பமுடன் கொண்டாடும்
இன்தமிழர் திருநாளாம்

நன்னாளாம் தைமுதலில்
நலம்பலவும் சேர்ந்திடவே
இன்னமுதப் பொங்கலோடு
இயற்கையினை வணங்கிடுவோம்

                                   கணேசுகுமார் பொன்னழகு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக