புதன், 16 ஜனவரி, 2019

பிள்ளை மனத்துத் தோழன்

கழப்பைக் கொண்டே யுழுது
          காட்டைத் திருத்து முழவன்
பிழைப்பி லேற்றம் கொள்ள
          பயிரை நம்பும் பரமன்
பிழைகள் செய்யாத் தெரியாப்
           பிள்ளை மனத்துத் தோழன்
உழைப்பை யென்றும் நம்பி
          உயர்ந்து வாழும் மறவன்

எருதை நட்பாய்க் கொண்டு
           ஏற்றம் கொள்ளு முழவன்
வறுமை வந்த போதும்
          வெறுமை கொள்ளாப் தமிழன்
பருவம் பார்த்து நடவைப்
          பாத்திக் கட்டு முழவன்
விருதை வாங்கிக் குவிக்க
          விருப்ப மில்லாத் மனிதன்

                             கணேசுகுமார் பொன்னழகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக