'வாழ்ந்து காட்ட வா'
சாதி என்னும் பேதி
சமுகம் தன்னி லுண்டு
மோதிப் பார்க்க எண்ணி
முன்னே வந்து நிற்கும்
வீதி தோறும் வந்து
வீணாய் வம்பு வளர்க்கும்
நாதி யற்றோர் மிரள
நாசம் செய்தே யழிக்கும்
சங்கம் சாதி யென்று
சரணம் பாடும் சபையோர்
இங்கே வந்த பின்பும்
இடைஞ்சல் புத்தி யெதற்கு
பங்க மளிக்கும் பிரிவைப்
பற்றிக் கொண்டு விட்டால்
மங்காப் புகழை மாற்றி
மனிதம் இழக்கச் செய்யும்
ஆதித் தமிழன் நம்மை
அழிக்க யெண்ணி வகுத்த
சாதி யென்னும் பேயைச்
சாடி யழித்து விட்டால்
வீதி யெங்கும் மனிதம்
விளைந்து செழித்து வளரும்
நாதி யுள்ள நமக்கு
நன்மை பலவும் கிடைக்கும்
மொழியும் விழியும் ஒன்றாய்
முனைந்து முன்னே சென்றால்
பழியும் பாவ முமின்றி
பாரில் வாழ முடியும்
குழியும் குன்று மின்றி
குமுகம் இருந்து விட்டால்
வழியில் தடைக ளின்றி
வாழ்ந்து காட்ட முடியும்
கணேசுகுமார் பொன்னழகு.
சாதி என்னும் பேதி
சமுகம் தன்னி லுண்டு
மோதிப் பார்க்க எண்ணி
முன்னே வந்து நிற்கும்
வீதி தோறும் வந்து
வீணாய் வம்பு வளர்க்கும்
நாதி யற்றோர் மிரள
நாசம் செய்தே யழிக்கும்
சங்கம் சாதி யென்று
சரணம் பாடும் சபையோர்
இங்கே வந்த பின்பும்
இடைஞ்சல் புத்தி யெதற்கு
பங்க மளிக்கும் பிரிவைப்
பற்றிக் கொண்டு விட்டால்
மங்காப் புகழை மாற்றி
மனிதம் இழக்கச் செய்யும்
ஆதித் தமிழன் நம்மை
அழிக்க யெண்ணி வகுத்த
சாதி யென்னும் பேயைச்
சாடி யழித்து விட்டால்
வீதி யெங்கும் மனிதம்
விளைந்து செழித்து வளரும்
நாதி யுள்ள நமக்கு
நன்மை பலவும் கிடைக்கும்
மொழியும் விழியும் ஒன்றாய்
முனைந்து முன்னே சென்றால்
பழியும் பாவ முமின்றி
பாரில் வாழ முடியும்
குழியும் குன்று மின்றி
குமுகம் இருந்து விட்டால்
வழியில் தடைக ளின்றி
வாழ்ந்து காட்ட முடியும்
கணேசுகுமார் பொன்னழகு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக