சுப அருணாசலம் நினைவுப் பாட்டுப் போட்டி
பாடல் 2
சிங்கைத் தம்பி சின்னத்
தம்பி வாங்க - நம்ம
சுபஅருணாசலம் நினைவு
உரைப்போம் வாங்க
வெங்கல குரலுக்குச்
சொந்தக்காரர் தானுங்க - அவர்
வேசமின்றிப் பாசம் வைத்தவர்
தானுங்க
(சிங்கைத் தம்பி சின்னத் தம்பி வாங்க – நம்ம...)
பங்கமின்றிப் பகையின்றிப்
பல்லினத்தார் வாழும் - நம்ம
பசுமைமிகு சிங்கை
நாட்டவராம் நீங்க
சிங்கை நாட்டின் சீர்மையினைக்
கெடுக்கும் - இந்தச்
சீரில்லாக் கிருமியினை
அழித்திடவே வாங்க
கொரோனாக் காலச் சூழலிலும்
நீங்க - பெரும்
கூட்டத்தோடு சேர்ந்திடாது
தனித்தனியாய் வாங்க
அரசு சொல்லும் ஆணைகளைக்
கேட்டு - நீங்க
அசுரத் தொற்றை விரட்டிடவே
வாங்க
(சிங்கைத் தம்பி சின்னத் தம்பி வாங்க – நம்ம...)
நாசிவழி உள்ளே
சென்று தாக்கி – உங்க
நல்லுடலை நசித்து
நச்சுடலாய் ஆக்கி
மூச்சுமுட்டும்
மூர்க்கத் தொற்றை விரட்ட – நீங்க
முகக்கவசம் மாட்டி
எங்கும் போங்க
மரணத் தொற்றை மடியச்
செய்யும் மருந்தை - நீங்க
மறந்திடாமல் போட்டுக்
கொண்டு வந்தால்
அரக்கன்போல அழிவைத்
தரும் தொற்றை - நீங்க
அண்டம் விட்டே அகற்றிடலாம்
வாங்க
(சிங்கைத் தம்பி சின்னத் தம்பி வாங்க – நம்ம...)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக