‘நாடு
காக்கும் நாயகர்கள்’ - 1
வாய்ப்பு ஏதும்
வழங்காத
வலிமை கொண்ட தொற்றோடு
ஓய்வு ஒழிச்சல்
ஏதுமின்றி
உண்மை யோடு உழைப்பவராம்
வாய்ப்புப் பலவும்
இருந்தாலும்
வளமை கொண்ட நாடாக்க
ஓய்வு ஒழிச்சல்
ஏதுமின்றி
உண்மை யோடு உழைப்பவரே
நோயும் நொடியும்
அண்டியோரை
நொந்த பார்வை பார்க்காது
தாயாய்க் காக்கும்
மருத்துவரும்
தாங்கிப் பிடிக்கும் செவிலியரும்
தூய்மைப் பணியைச்
செய்வோரும்
தொற்றுப் பரவைக் கணிக்கின்ற
தூய உள்ளக்
காவலரும்
தொடர்ந்து இங்குப் போராடி
இம்மைப் பொழுதும்
உறங்காது
இயன்ற உதவி செய்வதற்கும்
அம்மை யப்பன்
போலிங்கு
அருகில் இருந்து காப்பதற்கும்
தம்மை யொப்புக்
கொடுக்கின்ற
தன்மை வாய்ந்த தகையோராய்
நம்மில் இருந்து உழைக்கின்றார்
நன்மை பலவும் புரிகின்றார்
கேடு விளைக்கும் தொற்றினையே
களைந்து ஒழிக்கும் பணியேற்று
நாடு காக்கும் நாயகராய்
நாளும் சேவை செய்கின்றார்
அங்க மெல்லாம்
புண்ணாக்கி
அல்லும் பகலும்
உழைப்பவர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக