கடற்கரை
கடற்கரை நல்ல கடற்கரை
காற்று வீசும் கடற்கரை
தொடர்ந்து வரும் அலைகளை
தடுத்து நிறுத்தும் கடற்கரை
கப்பல் படகு நகர்வதை
கண்டு களிக்கும் கடற்கரை
அப்பால் தெரியும் யாவையும்
அழகாய் காட்டும் கடற்கரை
மாலை நேரப் பொழுதெல்லாம்
மக்கள் கூடும் கடற்கரை
காலை கையை ஆட்டி
களைப்பு போக்கும் கடற்கரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக