கிளி
கிளியே கிளியே வாவா
கீச்சுக் குரலைத் தாதா
தெளிவு நிறைந்த பேச்சால்
திரும்பச் சொல்ல வாவா
கோவைப் பழத்தின் நிறத்தை
கொக்கி அலகில் கொண்டு
தேவை நிறைந்த தமிழில்
திகட்டி பேச வாவா
கிள்ளை என்ற பெயரில்
கிறங்க வைத்த கிளியே
பிள்ளை மொழியில் பேச
பெருமை கொண்டு வாவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக