குயில்
குயிலே குயிலே வாராய்
கூவும் இசையைத் தாராய்
தயிறு கலந்த உணவை
தருவேன் இங்கு வாராய்
காலை நேரப் பொழுதில்
கனிவாய் கூவும் குயிலே
சோலை எங்கும் சுற்றி
சுகமாய் பாட வாராய்
மதிய நேரப் பொழுதில்
மாற்று இனத்துக் கூட்டில்
மெதுவாய் சென்று நீயும்
முட்டை இட்டு வாராய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக