அடங்கியதோ உயிர்ப்பசி
நாவாய் மீதேறி
செம்படவர்
நாற்றிசை சென்றிடினும் கடலன்னை
பூவாய்
அலைக்கரத்தால் தாலாட்டி
புத்தெழுச்சி தந்திடுவாள் ஆயின்
ஈராயிரத் தினாலாம்
ஆண்டு
இறுதி வாரந் தன்னில்
ஊரோடு உலக மதிர
உருவான ஆழிப் பேரலையே
சிறியோர் பெரியோ
ரென்று
சீர்தூக்கிப் பார்க்கா தெங்கள்
உரிமைப் பொருள்க
ளென்று
ஒருநொடியும் எண்ணாது நாங்கள்
கண்மூடித்
திறப்பதற்குள் எங்கள்
கரையோர குடியிருப்பும் உன்னலையால்
மண்மூடிப் போனதால்
இன்று
மாண்ட உயிர்பல வாகும்
தாவி பிடித்து விளையாடிய
தாய்தந்தையை
இழந்தோரும் தங்கள்
ஆவி கொடுத்து வளர்த்திட்ட
அன்புக்
குழந்தையை இழந்தோறும்
உறையும் இடமும் உண்ண
உணவும்
உடுத்தவுடை யும்மறந்து
கரையும் கண்ணோடு உடல்களை
கடலோரம் தேடி
அலைகின்றார்
மானுடத்தின் மதிப்புடை உயிரதனை
மாபேரலை
பறித்துப் போக
காணுகின்ற இடங்களில் எல்லாம்
கணக்கில்லா
உடல்கள் ஒதுங்க
தானேஅவ் வுடலின் சொந்தமென்று
தாவியோடி
அழுதிடும் காட்சி
வீணாய்பப் போனஆழிப் பேரலைக்கு
விழியில்
நீரைத் தாராதோ
ஊழித் தீவினையால் உலக
உயிர்கள் மீது
பாய்ந்திட்ட
ஆழிப் பேரலை யேயின்று
அடங்கி யதோஉன்
உயிர்ப்பசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக