நண்பனுக்குத் திருமணமாம்
பாலர் பருவம் தொட்டு
பழகிடும் உயிர்நண் பனுக்குக்
காலை யிங்கு
திருமணமாம்
கண்கள் மிளிரும் குதூகலமாம்
சீனி வாச னோடு
சேர்ந்தே உள்ளம் மகிழ
ஆனி ஆடி யாகிபின்
ஆவணித் திங்கள் நாளில்
கோதையர் சுற்றம் சூழ
குலமகள் குனிந்து நடக்க
மூதாதையர் கூடி
யிருக்கும்
முகூர்த்த சபையின் தன்னில்
மணமகள் அருகில் அமர
மங்கள வாழ்த்துக் களோடு
குணமகள் வலம்புரி
கழுத்தில்
கட்டு கின்றான் தாலியினை
சந்திர கலா
நெற்றியில்
செந்தூரப் பொட்டு வைத்து
சொந்த மெனஅவள்
கரத்தை
சீனி வாசன் பற்றி
செந்தமிழ் குறளின்
முப்பாலாய்
சேர்ந்து எங்கும் புகழ்பரப்பி
சொந்தம் பந்தம்
புடைசூழ
தினமும் மகிழ்வுடன் நீவாழ
ஆல்போல் குடும்பம்
விரிய
அழகிய குழந்தைகள் நீபெற்று
நாளும் அன்பைப்
பொழிந்தே
நலமாய் வாழ்க வாழ்கவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக