பிரிவுத்துயர்
கடலாடும் படகிற்கு – நல்ல
கலங்கரை
விளக்காய்
உடல்மனத் திலாடும் – என்
உன்னத
அன்பிற்கு
காதல் கனவில் – ஒரு
கருவறை ஒளியாய்
ஓதும் ஆலயத்தில் – தினம்
ஒலிக்கும்
வார்த்தையானேன்
பௌர்ணமி நிலவில்
– நிழல்
பதித்த சித்திரம்போல்
அவளின் நினைவில்
– தினம்
அலையும்விசித் திரமானேன்
பகல்பொழுதும்
பாராது – நான்
படுத்துறங்கும் வேளையிலும்
நிகழ்பொழுதை
மறந்து – நான்
நெடுநேரம் மனவானில்
ஜோடிப் பறவையாய்
– காதல்
சூடிப் பறந்து
வேடிக்கை
விளையாட்டில் – நித்தம்
வெகுளியாய்த் திரிந்து
வளர்த்துவந்த
காதல்பூ – (மண)மாலை
வரவுகண்டுதன் நிலைமாறி
உலர்ந்து
உதிரக்கண்டு – நான்
உள்ளம் உருகினேனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக