நட்பு
நட்பு நல்ல நட்பு
நாட றிந்த
நட்பு
நட்பு இல்லா வாழ்வை
நலியச்
செய்யும் நட்பு
உயர்வு தாழ்வு இன்றி
உயிராய்ப்
பழகும் நட்பு
அயர்வு கொண்ட போதும்
அழிந்தி டாத
நட்பு
கள்ளம் கபடம் இன்றி
கனிவாய்ப்
பழகும் நட்பு
உள்ளம் மகிழத் தானே
உண்மை பேசும்
நட்பு
இன்பம் வந்த போது
இனிமை கொள்ளும்
நட்பு
துன்பம் வந்திட் டாலும்
துவண்டி டாத
நட்பு
பட்டி தொட்டி எங்கும்
பரந்து விரிந்த
நட்பு
கட்டித் தங்கம் போல
கறையில் லாத
நட்பு
காற்று வீசும் திசையாய்
கலந்து
இருக்கும் நட்பு
நேற்று இன்று என்றும்
நேர்மை குன்றா
நட்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக