1. பள்ளி
கல்வி கற்கும் நாமெல்லாம்
கருத்தில்
ஒன்று கூடவே
பள்ளிக் கூடம் போகலாம்!
பாடந் தன்னைப் படிக்கலாம்!
சின்னஞ் சிறுவர் பலருமே
சேர்ந்து
படிக்கும் பள்ளியில்
அண்ணன் தம்பி போலவே
அன்பாய்ப்
பழகிப் மகிழலாம்!
கன்னித் தமிழைக் கற்கவும்
கலைகள் பலவும்
அறியவும்
எண்ணம் கொண்டு நாளுமே
எழிலாய்
கல்வி கற்கலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக