4
தொடர்வண்டி!
பாப்பா! பாப்பா! தொடர்வண்டி!
பாய்ந்து
செல்லும் தொடர்வண்டி!
தாப்பா* இல்லா கதவுகளும்
தானாய்
மூடும் தொடர்வண்டி!
எங்கள் நாட்டுத் தொடர்வண்டி!
ஏறிச்
செல்ல ஏற்றவண்டி!
சிங்கை எங்கும் சென்றாலும்
சிறப்பாய்ப்
பயணம் செய்திடலாம்!
காலை மாலை வேளையிலும்!
கடிதாய்ச்
செல்லும் தொடர்வண்டி!
நாளை மாலை நாம்சேர்ந்து
நலமாய்ச்
செல்வோம் வாரீரோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக