2. புத்தகம்
புத்தகம் நல்ல புத்தகம்!
புதுமை நிறைந்த புத்தகம்!
புத்தம் புதிய எண்ணத்தைப்
பதிய வைக்கும் புத்தகம்!
கருத்து விளக்கப் படங்களும்
கற்பனை நிறைந்த
கதைகளும்
பொருத்த மிக்க வண்ணத்தில்
பொதிந்து நிற்கும் புத்தகம்!
கற்றுக் கொடுக்கும் நீதியும்
கருணை
கொண்ட உள்ளமும்
பெற்றுத் தந்த புத்தகம்!
பெருமை
சொல்லும் புத்தகம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக