5. தமிழ்மொழி
சேர்ந்தா டம்மா சேர்ந்தாடு!
சிங்கைத்
தமிழே சேர்ந்தாடு!
தேர்ந்த மொழியாம் தேன்தமிழைத்
தெரிந்த
பாவால் பாராட்டு!
கன்னித் தமிழாம் நம்மொழியைக்
கண்ணின்
மணியாய்க் காத்திடவே
எண்ணும் எழுத்தும்
இரண்டோடும்
இன்தமிழ்
புகுத்தி உரையாற்று!
வானம் பூமி உள்ளவரை
வளர்தமிழ் மொழியும்
உண்டென்று
கானக் குயிலின் இசையோடு
கலந்தே நீயும் புகழ்பாடு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக