வெள்ளி, 4 ஜூன், 2021

நாள் : 24 (24/04/2021)

தலைப்பு : மறதியுடையவரின் பார்வையிலிருந்து

 

மனிதப் பிறப்பின் மாண்பினை

மதிக்கத் தெரியா உயிர்களில்

மனித வாழ்வு வாழ்ந்திடும்

மடையர் களுக்கு யாவிலும்

நினைவு மின்றிப் போயிடும்

நிலையை யென்றும் கொண்டிட

இனிய வாழ்வு மற்றிட

இறந்த வாழ்வே கெடுத்தான்

 

உறவும் பிறவும் சூழ்ந்திட

ஒன்றாய் வாழ்ந்த போதிலும்

மறதி யென்னும் நோயினால்

மனமும் கெட்டு அலையவே

இருக்கும் பொருளின் இடத்தையும்

இயம்பும் சொல்லின் பொருளையும்

மறந்து மறந்து போகவே

மனமும் நொந்தே வாழ்கிறார்

 

மறதி யென்னும் கொடியநோய்

மனத்தி னுள்ளே வந்ததும்

வறண்டு போன புத்தியும்

வந்து வந்து போகவே

இறந்த கால வாழ்வையும்

இன்று நடக்கும் நிகழ்வையும்

மறந்து நெஞ்சம் வாடவே

மதியும் கெட்டு அலைகிறார்

 

கணேசுகுமார் பொன்னழகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக