நாள் : 18 (18/04/2021)
தலைப்பு : உலா செல்லும் சிநேகிதியே
சுற்று கின்ற பூமியிலே
சொத்தும் சுகமு மேதுமின்றி
பெற்றோர் பிறந்தோர் பாசமின்றிப்
பிடித்த பொருளில்
நாட்டமின்றி
உற்றோர் உறவோர் யாருமின்றி
உள்ளம் தன்னில் அமைதியின்றி
வெற்று வாழ்க்கை வாழ்கின்ற
விரக்தி மனத்தைக்
கொண்டோரும்
விரச மில்லா உன்முகத்தை
விரும்பிக் கண்ணால்
பார்க்கவே
மரங்கள் மலைகள் மறைத்தாலும்
மண்டும் இருள்தான்
தடுத்தாலும்
உரசும் மேகக் கூட்டத்தில்
ஊடிச் சென்று ஒளிவிளக்காய்
இரவு முழுதும் உலாவுகின்ற
இனிய நிலவே சிநேகிதியாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக