நாள் : 15 (15/04/2021)
தலைப்பு : தங்கக் கூண்டுகளில் அந்நியர்
கொரனா கிருமி பரவி
கொடிய தொற்றும்
தாக்க
மரணக் கணக்கும் கூடி
மனிதர் பயந்து
நடுங்க
தருணம் பார்த்த அரசும்
தடுப்பு முறைகள்
செய்ய
வரம்பு மீராச் சட்டம்
வடித்துக்
கொடுத்த போது
சிங்கை யெங்கள் நாட்டை
சீர்மை செய்து உயர்த்த
அங்க மெல்லாம் தேய்ந்து
அயரா வுழைப்பைக்
கொடுத்து
பங்கு கொண்ட அயலார்
பரிவு வேண்டி
நிற்க
தங்கும் விடுதி யெல்லாம்
தரத்தில் கட்டி
முடித்து
தங்கக் கூண்டாய் மாற்றித்
தான மாகத்
தந்தார்
இங்கு வந்த அயலார்
இருக்கும்
இடத்தை விட்டு
எங்கும் செல்ல முடியா
ஏக்க நிலையில்
வாட
தங்கக் கூண்டில் மாட்டித்
தவிக்கும்
கிளிபோ லானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக