சனி, 17 ஏப்ரல், 2021

 

நாள் : 7 (07/04/2021)

தலைப்பு : முகவரியில்லாப் புன்சிரிப்பு   

 

முகத்தில் முழுமதியைக் கொண்டுவந்து

முல்லைப் பூப்போல முறுவலித்து

அகத்தில் அன்புதனை அடக்கிவைத்து

அமுதச் சுவையினையும் கூட்டிவைத்து

உகந்த உறவெல்லாம் ஒன்றுகூடி

உள்ளச் சுமைதன்னைப் போக்கினாலும்

முகவ ரியில்லாப் புன்சிரிப்பும்

முற்றும் முழுதாக மாற்றிவிடும்

 

            (வேறு)

 

முகத்தோடு முகம்காட்டி 

முறுவலிக்கும் நேரமட்டும்

அகத்தோடு அகம்கலந்து

அன்பினைநாம் கொண்டாலும்

முகவரியும் இதழ்வரியும்

முழுவதுமாய் மறைந்தால்தான் 

முகத்திலொரு புன்சிரிப்பை

முழுமையாகப் பெற்றிடலாம்

 

கணேசுகுமார் பொன்னழகு.

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக