சனி, 17 ஏப்ரல், 2021

 

நாள் : 9 (09/04/2021)

தலைப்பு : குழந்தையின் உலகம்  

 

கள்ள மில்லாக் குறும்புகள் செய்து

களிப்புக் கொள்ளும் குழந்தைகள் உலகம்

வெல்லம் போல இனிப்புடன் பேசி

விந்தை செய்யும் விசித்திர உலகம்

உள்ள மெங்கும் கறைபட முடியா

உண்மை நிறைந்த உன்னத உலகம்

நல்ல எண்ணம் நலமுடன் தோன்றும்

நம்ம வீட்டுக் குழந்தைகள் உலகம்

 

அக்கம் பக்கம் குழந்தைகள் கூடி

அம்மா அப்பா பிள்ளைக ளென்று

தக்க முறையில் பெயர்கள் சூட்டித்

தடுப்பு வைத்து உணவுகள் சமைத்து

வெக்கம் கலந்த புன்னகை காட்டி

வீட்டில் உள்ள உறவுகள் போலே

பக்கம் அமர்ந்து பணிவிடை செய்யும்

பண்பை வளர்க்கும் பழம்பெரும் உலகம்

 

இன்று வளரும் குழந்தைகள் எல்லாம்

      இருப்பு கொள்ளா அவசர வாழ்வில்

மின்னல் போல மின்னிடும் போக்கை

      மிரட்டி நிற்கும் மின்னணு உலகம்         

நண்பர் சூழ நன்மைகள் உணர்ந்து

நாளும் பொழுதும் நயம்படப் பேசி

நன்றாய்க் கூடிப் பழகிடும் நேரம்

      நலிந்து போகக் கண்டிடும் உலகம்

     

இன்று சமைத்த உணவினைக் கூட

      இரவில் உண்ணத் மறுத்திடும் குழந்தை

என்றோ சமைத்த உணவினை யெல்லம்

      இரந்து வாங்கும் இன்றைய உலகில்

குன்று போலக் குவிந்திடும் நொறுக்கும்

      குறைந்த சத்து உணவுகள் முழுதும்

மென்று உண்ணச் சிரித்திடும் குழந்தை

      மேன்மை சிறப்பில் நலிந்திடும் உலகம் 

 

கணேசுகுமார் பொன்னழகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக