நாள் : 4 (04/04/2021)
தலைப்பு : காட்சிப்பிழைகள்
மண்ணில் தோன்றும் மரம்செடி கொடியும்
மாக்கள் பறவை ஊர்வன
யாவும்
கண்ணால் காணும் காட்சிகள் போலக்
கருத்தாய் நெஞ்சில்
பதிந்திடும் போது
உண்மைப் பொருளை உணர்ந்திட
யெண்ணி
உலகோ ரெல்லா மிருந்திடும்
நேரம்
மின்னல் போல மின்னிடும் வாழ்க்கை
மாயப் பொருளாய்த்
தோன்றிட மறையும்
ஊற்றாய் ஊறும் உருப்படா எண்ணம்
உள்ளே யிருந்து ஒழுகிட
வழிந்து
காற்றாய் மறையும்
மனித வாழ்வு
காட்சிப் பிழைபோல்
கண்களில் தோன்ற
மாற்ற மொன்றை மனத்தினில் வைத்து
மனிதம் தோன்ற வாழ்பவர்
கூட
நேற்று மின்றும் வாழ்ந்தவர் வாழ்வை
நிறைந்த யுர்ந்த
வாழ்வெனக் கொள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக