நாள் : 5 (05/04/2021)
தலைப்பு : மனம்
எழுதும் எழுத்தின் கருத்துகளை யெல்லாம்
உலகோ ரனைவரு மேற்பதில்லை யிந்த
நழுவினைப் போக்கி நலம்செய்யும் மாந்தர்
குழுவினை வாழ்த்தும் மனம்
பள்ளிக்குச் சென்றுதமிழ்ப் பாடம் படித்திட
கல்வித் துறையில் வழிவகை செய்துதம்
நல்ல கடமைகள் யாற்றும் நமதரசைத்
துள்ளிப் பாடும் மனம்
குமிலென யெண்ணி யுடைக்கத் துடித்தும்
தமிழ்மொழி யின்று செழிப்பாய் விளங்க
திமில்போல் உயர்ந்து திறமா யுழைத்த
தமிழரைப் போற்றும் மனம்
கருவிழிபோ லெண்ணிக் காத்தருள் செய்தும்
நறுந்தமிழ் தன்னை நலமாய் விளங்க
மருந்தென யிருந்து மகத்துவம் செய்தும்
இருந்தவரைப் போற்றும் மனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக