வகுப்பில் சிந்தனைத் துளி பகிர்தல் (14 – 09 -2012)
மனிதன் தன் உள்ளத்தில் எழும் கருத்தை
அல்லது செய்தியைப் பிறருக்கு சொல்வதற்குப் பயன்படுத்தும் கருவியே மொழியாகும்.
ஆனால் தன்னுடையப் பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் பின்வரும் சந்ததிகளுக்கு
வடித்து அல்லது படைத்து வைப்பதே இலக்கியமாகும். இந்த இலக்கியங்கள் செம்மொழியாம்
நம் தமிழ்மொழியில் காணக் கிடைப்பவை அதிகம். அவ்விலக்கியங்களில் சங்க கால
இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், அறநெறி
உணர்த்தும் இலக்கியங்கள், தற்கால இலக்கியங்கள் என பலவகைப்படும். இத்தகைய
இலக்கியங்கள் மக்களை நல்வழிப்படுத்தவும்,
கட்டுப்பாடான குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுத்தவும் உதவுகின்றன. இவ்விலக்கியங்களைப்
படித்து நாமும் பயன் பெறுவோமாக.
வணக்கம்!
பெயர் கணேசுகுமார் பொன்னழகு
மாணவ ஆசிரியர் (பட்ட மேற்படிப்புப் பட்டயக்கல்வி)
தேசியக் கல்விக் கழகம்
சிங்கப்பூர்.
பாடம் : QCT520 தமிழ்மொழி கற்பித்தல் 1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக