புதன், 28 செப்டம்பர், 2016



                          உள்ளத்தில் உண்மையொளி
      இன்று வகுப்பில் உள்ளத்தின் உண்மையொளி என்ற தலைப்பில் சிந்தனைத் துளி சொன்னேன்.
      மாணவர்களே! வணக்கம் இன்று நம் ஆசிரியர் நாம் இன்னும் ஒரு வாரம் மட்டுமே சந்திக்க முடியும் என்றார். நான் சொல்வது என்னவென்றால் பாடம் படிக்கும் முறையில் ஒரு வாரம் சந்திப்போம். பிறகு, நட்பு முறையில் வெளியிலும் சந்திக்கலாம் என்பதே என் அவா.
மேலும், இங்கிருந்து செல்லும் நாம் ஆசிரியர் கூற்றுக்கிணங்க உங்கள் ஒருவரால் பத்து தமிழாசிரியர்களையோ, பத்து தமிழ் ஆர்வலர்களையோ உருவாக்க முடியும். அந்தப் பத்து பேர் நூறு பேராவார். இப்படியே விரிந்து கொண்டு போகும். அப்படி நிகழ வேண்டுமானால், நம் உள்ளம் உண்மையான ஒளியால் நிறைந்திருக்க வேண்டும். அப்போதுதான் நாம் சொல்லும் ஒளி பொருந்தியதாக இருக்கும்.
அந்த ஒளி பொருந்திய சொல் தமிழில் கல்வி அறிவு இல்லாது பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் பத்துப் பேரையாவது மேலேற்றிவிடும். இதனையே பாரதியார்,
      உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்

        வாக்கினிலே ஒளி உண்டாகும்...என்று கூறுகிறார். அதாவது, உள்ளத்திலே ஒளி உண்டாகின்றபோது, சொல்லுகின்ற சொல்லிலே ஒளி உண்டாகிறது. எனவே, இதன்மூலம் கல்வியும், கலைப் பெருக்கமும் மேவுமாயின் பள்ளத்திலே வீழ்ந்திருக்கும் கல்லாமைக் குருடர்கள் விழித்து அறிவும் ஆற்றலும் பெறலாம் என்பது பாரதியாரின் வழிகாட்டுதலாகும். எனவே, அவர் சொல்லுக்கிணங்க நாமும் பிறரிடம் ஒளி பொருந்திய சொற்களைப் பேசிப் பயனடைவோம். நன்றி.

கணேசுகுமார் பொன்னழகு
மாணவ ஆசிரியர்
தேசியக் கல்விக் கழகம்
சிங்கப்பூர்.


QCT 521 தமிழ்மொழி கற்பித்தல் 2
நாள்                     : 13 – 02 – 2013


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக