தீபாவளி
திருநாளாம் திருநாளாம்
தீபாவளி திருநாளாம்
தெருவெல்லாம் ஒளிவிளங்கும்
தித்திக்கும் திருநாளாம்
மத்தாப்பு ஒளிகொண்டு
மற்றவரை மகிழ்விக்க
புத்தாடை கட்டியிங்கு
புதுப்பொலிவு தரும்நாளாம்
முன்னிறந்த
மூத்தோர்க்கு
முதல்நாளே படையலிட்டு
பின்னோரும்
போற்றுகின்ற
புகழ்கொண்ட பெருநாளாம்
சிங்கையிலே வாழுகின்ற
சீனர்மலாய் இனத்தவரும்
சங்கமித்துக்
கொண்டாடும்
சமதர்ம திருநாளாம்
திருநாளாம்
திருநாளாம்
தீபாவளி திருநாளாம்
தெருவெல்லாம்
ஒளிவிளங்கும்
தித்திக்கும் திருநாளாம்
Festival O’ Festival
Deepavali
Festival
Way full of Lights
Enjoyable
Deepavali
With the crackers
We make others happy
With new clothes
Rejuvenating Deepavali
Prayers in remembrances
Of our ancestors
Praising with all
The graceful Deepavali
The Chinese and the Malay
Together with the
Indians
Come together and celebrate
The joyous Deepavali
Festival O’ Festival
Deepavali Festival
Way full of Lights
Enjoyable Deepavali
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக