ஜொகூர்
தமிழ்க்கல்வியாளர் சமூகநல மேம்பாட்டு இயக்கம்
பன்னாட்டுத்
தமிழ்க்கல்வி ஆய்வரங்கம் 2012
ஆசிரியம்: சுவடுகளும்
சுவடிகளும்
24 – 25. 11.
2012-11-30
ஜொகூர் பாரு
என்னுடைய
பார்வையில்...
ஜொகூர் தமிழ்க்கல்வியாளர் சமூகநல மேம்பாட்டு
இயக்கம் சார்பில் 24, 25.11.2012
ஆம் தேதிகளில் ஜொகூர் பாருவில் பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆய்வரங்கம் 2012 ல் ஆசிரியம்: சுவடுகளும்
சுவடிகளும் என்ற தலைப்பில் ‘விஞ்சிடத் துஞ்சிடேல்’ என்ற கொள்கை
முழக்கத்தோடு நடத்தப்பட்டது. இவ்வாய்வரங்கில் சிங்கப்பூர் தேசியக் கல்விக்
கழகத்தில் இருந்து முனைவர் ஆ. ரா. சிவகுமாரன் அவர்கள் தலைமையில் இருபது மாணவ
ஆசிரியர்கள் கலந்து கொண்டோம். மேலும், மலேசிய நாட்டின் பல
மாநிலங்களிலிருந்தும் தமிழாசிரியர்களும் பேராசிரியர்களும் தமிழார்வளர்களும் கலந்து
கொண்டனர்.
ஆய்வரங்கில் நம் தமிழ்மொழிக்கும் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கும் தேவையான
கருத்துகளுடன் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன.
அக்கட்டுரைகளின் மூலம் நான் தெரிந்து கொண்டதும் புரிந்து கொண்டதும்...
1.
தமிழ்மொழியின் சிறப்புகளையும் நாம் தமிழ்மொழியில் செய்கின்ற
பிழைகளையும் அதை மாணவர்கள் எவ்வாறு தவிர்க்கலாம் என்பனவற்றையும் முனைவர் ஆ. ரா.
சிவகுமாரன் அவர்கள் படைத்தக் கட்டுரையின் வாயிலாக அறிந்துகொண்டேன்.
2.
மலேசியாவில் உள்ள தமிழர்கள் தமிழ்க் கல்விக்கு எவ்வளவு
முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது பற்றியும், அதே
நேரத்தில் அக்கல்வியைப் பெறுவதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் பற்றியும்
தெரிந்து கொண்டேன்.
3.
மலேசியவில் தமிழ்க்கல்வி பயின்றவர்கள் எவ்வாறு பின்னுக்குத்
தள்ளப்படுகிறார்கள் என்பதையும் ஆனால், அந்நிலை சிங்கப்பூரில் இல்லை என்பதையும்
மனதிற்குள் ஒப்பிட்டுப் பார்த்தேன்.
4.
பள்ளியில் பலதரப்பட்ட மாணவர்கள் இருப்பார்கள். அவர்களை
எவ்வாறு அணுகலாம், தமிழ்மொழியின்மீது ஈடுபாடு கொள்ளச் செய்யலாம் என்பதையும்
அறிந்து கொண்டேன்.
மொத்தத்த்தில் இவ்வாய்வரங்க மாநாடு எனக்கு பயனுள்ளதாகவே இருந்தது. எப்போதும்
இருக்கும். மேலும், பல பேராளர்களுடன் பழகும் வாய்ப்பும் கிடைத்தது என்பதில்
மிகையில்லை.
இப்படிக்கு
கணேசுகுமார் பொன்னழகு
மாணவ ஆசிரியர்
பட்ட மேற்படிப்பு
பட்டயக் கல்வி(உயர்நிலை)
தேசியக் கல்விக்கழகம்
சிங்கப்பூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக