நாடகம்
ஒற்றுமையே உயர்வுக்கு வழி
காட்சி 1
இடம் : உயர்நிலை பள்ளி வளாகம்
காலை : உணவு இடைவேளை
நடிகர்கள் : அன்பு, அசன், ஆகியோர்.
(உயர்நிலை இரண்டு படிக்கும் அன்பு தன் நோட்டு புத்தகத்தில் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கு வரும் அசன் அன்புடன் பேசுகிறான்.)
அசன் : அன்பு! அன்பு!! என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
அன்பு : இம் பல்லாங்குழி விளையாடுகிறேன். என்ன என்னைப்
பார்த்தால் உனக்குக் கிண்டலாக உள்ளதா?
அசன் : இல்லை நண்பா நீ எதோ எழுதிக் கொண்டிருக்கிறாய் என்பது
தெரிகிறது. ஆனால் அது என்னவென்றுதான் தெரிய வில்லை.
அன்பு : நேற்று நம் தமிழ் வகுப்பில் தமிழாசிரியர் ஒற்றுமையே உயர்வுக்கு
வழி
என்ற தொடருக்கு அதற்கான விளக்கம் சொன்னாரில்லையா?
அதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அசன் : உனக்கென்ன வகுப்பிற்கு வெளியேயும்
எதையாவது
எழுதிக்கொண்டே
இருப்பாய். நமக்கு அதெல்லாம் ஒத்து வராது.
அன்பு : ஆமாம் இவ்வளவு நேரம் நீ எங்குச்
சென்றாய்?
அசன் : உணவுக் கடைக்குச் சாப்பிட சென்றேன். உனக்கும் ஏதாவது
வாங்கி வரவா?
அன்பு : வேண்டாம் நம்முடைய தமிழாசிரியர் சொன்ன தலைப்பில் கட்டுரை
எழுதுவதைப் பற்றிப் பேசுவோம்.
அசன் : சரி எதுவாக இருந்தாலும்
நடந்துகொண்டே பேசுவோம்.
அப்போதுதான்
எனக்குச் செரிமானம் ஆகும்.
அன்பு: சரி
நான் உன்னுடைய வழிக்கே வருகிறேன். நடந்துகொண்டே
பேசுவோம்.
ஆனால், அது
கட்டுரையைப் பற்றியதாக மட்டும்தான்
இருக்கவேண்டும்.
காட்சி 2
இடம் : உயர்நிலை பள்ளி மைதானம் நடைபாதை
நடிகர்கள் : அன்பு, அசன், எழில்மதி ஆகியோர்.
(அன்பும் அசனும் பள்ளி மைதான நடைபாதை வழியாகப்
பேசிக்கொண்டே நடந்து செல்கின்றனர் அப்போது அவர்களுடைய வகுப்புத் தோழி எழில்மதி
வருகிறாள்.)
அசன் : என்ன அன்பு சொல்கிறாய்? கட்டுரையா அவர் அப்படி எதுவும் எழுதச்
சொல்லவில்லையே.
அன்பு : ஆம் எழுதச் சொல்லவில்லை. இருந்தாலும் அவர் சொன்ன அந்த
விளக்கம் என் மனத்தில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. எனவே
அதனைக் கட்டுரையாக எழுதுகிறேன்.
எழில்மதி: அன்பு! அசன்! இருவரும் என்ன பேசிக் கொண்டிருக்கீறீர்கள். உங்கள்
உரையாடலில் கலந்து கொள்ளாலாமா?
அசன் : யாரு எழிலா வா வா இவ்வளவு நேரம் எங்குச் சென்றாய்?
எழில்மதி : உணவுக் கடைக்குச் சாப்பிட சென்றேன். உங்களுக்கு ஏதாவது வாங்கி
வரவா?
அசன் : நானும் உணவுக் கடையிலிருந்துதான்
வருகிறேன் அங்கு உன்னைப்
பார்க்கவில்லையே?
எழில்மதி : ஓ அதுவா? நான்
மீனாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீ
கவனித்திருக்கமாட்டாய்.
அன்பு : அவன் சாப்பிடுவதிலேயே குறியாக இருந்திருப்பான் அதுதான்
உன்னைக்
கவனிக்கவில்லை என நினைக்கிறேன்.
அசன் : உனக்கு என்னைக்
கேலி செய்யவில்லையென்றால் உறக்கம் வராது?
சரி
அப்படி என்ன செய்தியைக் கட்டுரையில் எழுதுகிறாய். சொல்
பார்ப்போம்.
எழில்மதி : என்ன? கட்டுரை எழுதுகிறாயா?
அசன் : ஆமாம் அன்பு கட்டுரை எழுதுகிறான். அதைப் பற்றிக் கேட்போம்.
எழில்மதி : அப்படியா அன்பு எங்கே சொல் பார்ப்போம்.
அன்பு : வேறோன்றும் இல்லை நம் சிங்கப்பூரில் பல இன மக்கள் இணைந்து
ஒற்றுமையுடன் வாழ்வது பற்றித் தான் எழுதுகிறேன்.
அசன் : இதில் என்ன இருக்கிறது. இங்கு ஒற்றுமையுடன் வாழ்ந்தாலும்
அவரவர் வாழ்க்கை அப்படியேதானே இருக்கிறது.
அன்பு : என்ன இப்படி சொல்லி விட்டாய். தனி நபருடைய ஒவ்வொரு
உழைப்பும் ஒன்று சேர்ந்ததால்தான் நம்நாடு உலக அரங்கில் ஒரு
முன் மாதிரியாக உள்ளது.
அசன் : அப்படியென்றால் நாடு முன்னேற்றம் மட்டும் போதும் நாம் உயர்ந்து
விடலாம். நம் உழைப்பு தேவையில்லை அப்படித்தானே
அன்பு : ஆம் நண்பா வரப்பு உயர்ந்தால் நெல்
உயரும் என்ற
பொன்மொழியைக்
கேட்டதில்லையா?
அசன் : இப்ப என்ன சொல்ல வருகிறாய். நான்
எதையோ கேட்கிறேன். நீ
வரப்பு நெல் என்று எதையெதையோ சொல்கிறாய்.
ஒன்றும்
புரியவில்லை.
அன்பு : அவரவர் வாழ்க்கையை மட்டும் பார்க்காதே நம் நாட்டின்
ஒற்றுமையால் உண்டாகும் முன்னேற்றத்தையும், உயர்வையும் பார்.
நாடு உயர்ந்தால் நாமும் உயர்வோம்.
எழில்மதி : சரி
அப்படியே நாம் ஒற்றுமையுடன் இருந்தால் என்ன என்ன
நன்மைகள்
உண்டாகும்.
அன்பு : நாம் ஒற்றுமையுடன் இருந்தால் நாம் நாடு சண்டைச் சச்சரவு
இல்லாத நாடாக விளங்கும். அமைதி நிலவும். மனிதபிமானம்
வளரும். நம் நாட்டின் ஒற்றுமையைக் கண்டு பிற நாட்டவரும்
போற்றுவர். துணிந்து வந்து நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத்
துணை புரிவர்.
அசன் : அதற்காக
நாம் என்ன செய்ய வேண்டும்.
அன்பு : இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் இந்நாடு என்னுடைய நாடு.
இந்நாட்டினுடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் நானே பொறுப்பு என்ற
மனப்பக்குவம் வளர வேண்டும்.
இங்கு
வாழும் யாவரும் என்நாட்டு மக்கள் என்ற உறுதிப் பாட்டை
எடுக்க வேண்டும்.
அசன் : அடேங்கப்பா! இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? பரவாயில்லை
இன்று உணவு இடைவேளை பயனுள்ளதாகவே இருந்தது.
எழில்மதி : ஆம் அன்பு பயனுள்ளதாகவே இருந்தது. சரி சரி வாருங்கள் நாம்
கணக்குப்
பாட வகுப்பிற்கு நேரமாகிவிட்டது.
அன்பு : வாருங்கள்
செல்வோம்.
(மூன்று
பேரும் வகுப்பிற்குள் நுழைகிறார்கள்)
காட்சி முடிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக