ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

2009 ஆம் ஆண்டு  இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்தபோது எழுதியது

                                              ' ஓ ' தமிழா !

                   பண்பாட்டு  பெருமையோடு

                             பார்போற்ற வாழ்ந்தகுலம்

                   புண்பட்டுக்  கிடக்குதுபார்

                             புழுங்கிமனம் துடிக்குதுபார்


                   எண்ணற்ற இழப்புகளை

                             எம்தமிழர்  பெற்றிடினும்

                    விண்ணதிர  வேட்டுகளை
                           
                              வேசிமகன்  வெடிக்கின்றான்


                    கையிழந்து  காலிழந்து
                           
                              கட்டுமனை  தானிழந்து

                    வெயிலிலே காய்கின்றார்

                              வெந்தணலில்  எரிகின்றார்


                      சீறும்புலி  யிருக்கநம்

                               சின்னஞ்சிறு  பிஞ்சுகளை

                      போரென்று வதைக்கின்றான்

                                புலிகண்டு  பதைக்கின்றன்


                      கண்ணெதிரே  நடக்கின்ற

                                கயவாளி மூர்க்கத்தை

                     கண்ணற்ற குருடன்போல்

                                காந்திதேசம்  பார்க்குதுபார்   

ICT for Meaningful Learning

 

செவ்வாய், 29 மே, 2012

                       வாழ்த்து 2

கற்றல் பாடம் உருவாக்கும்
       கல்வி அமைச்சுப் பணியினிலே
பெற்றுக் கொண்டப் பொறுப்புகளைப்
      பெரிதாய் எண்ணிச் செய்தவராம்
வெற்றுப் பேச்சை விட்டொழித்து
       வேலை செய்யும் இடத்தினிலும்
வெற்றி என்றக் குறிக்கோளே
       வேண்டும் நமக்கு என்றவராம் 
   
உற்றத் தோழர் யாவருக்கும்
       உரித்தாய் உதவி புரிந்தாலும்
கற்றுத் தெளிந்தக் கல்வியினைக்
       கருத்தில் கொண்டு வாழ்பவராம்
நற்றாய் அன்பைப் போன்றிங்கு
       நமக்கு அளித்து வாழ்ந்தாலும்
சற்றும் கடமை தவறாது
       சமமாய் மதித்து நடப்பவராம்

அருமை பெருமை பேசாது
       அன்பு ஒன்றைக் கொண்டவராம்
இருமை இல்லா இடமாக
       இன்றும் பணியைச் செய்வபராம்
வறுமை இல்லா மனத்தினிலே
       வாழும் கலையைச் சொன்னவராம்
பொறுமை என்றச் சொல்லுக்குப்
       பொருந்தி வாழக் கற்றவராம்
                வாழ்த்து
கற்றல் பாடம் உருவாக்கும்
       கல்வி அமைச்சுப் பணியினிலே
பெற்றுக் கொண்டப் பொறுப்புகளைப்
      பெரிதாய் எண்ணிச் செய்தவரே!
வெற்றுப் பேச்சை விட்டொழித்து
       வேலை செய்யும் இடத்தினிலும்
வெற்றி என்றக் குறிக்கோளே
       வேண்டும் நமக்கு என்றவரே! 
   
உற்றத் தோழர் யாவருக்கும்
       உரித்தாய் உதவி புரிந்தாலும்
கற்றுத் தெளிந்தக் கல்வியினைக்
       கருத்தில் கொண்டு வாழ்பவரே!
நற்றாய் அன்பைப் போன்றிங்கு
       நமக்கு அளித்து வாழ்ந்தாலும்
சற்றும் கடமை தவறாது
       சமமாய் மதித்து நடப்பவரே!

அருமை பெருமை பேசாது
       அன்பு ஒன்றைக் கொண்டவரே!
இருமை இல்லா இடமாக
       இன்றும் பணியைச் செய்வபரே!
பொறுமை என்றச் சொல்லுக்குப்
       பொருந்தி வாழக் கற்றவரே
வறுமை இல்லா வயதினராய்
       வாழ என்றும் வாழ்த்துகிறோம்.

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

புத்தாண்டு வருகுதுபார்

புத்தாண்டு வருகுதுபார்தமிழ்
                புத்தாண்டு வருகுதுபார்
முத்தானதையினிலேதமிழ்
                முடுசூடி வருகுதுபார்

                எண்ணமதில் குடிகொண்டஉயர்                   
இனியதமிழ்ப் பாட்டோடு
                பண்பாட்டுப் பெட்டகமாய்தைப்
                                பொங்கலன்று வருகுதுபார்

                நன்செய்யுள் திருக்குறளைஉயர்
                                நாடுபோற்ற செய்ததமிழ்
பொன்னாண்டை கூட்டியிங்குஉயர்
புதுப்பொலிவு தருகுதுபார்

                கன்னித்தமிழ் வையகத்தில்உயர்
                                கலைகள்பல கொண்டிங்கு
                வண்ணத்தமிழ் புத்தாண்டாய்உயர்
                                வையகத்தில் வருகுதுபார்

                நன்னாளாம் புத்தாண்டில்உயர்
                                நல்லவர்கள் வாழ்த்திடவே
                என்னாளும் பொன்னாளாய்உயர்
                                ஏற்றமுடன் வருகுதுபார்

                                                                              பொன்.கணேசுகுமார்                                                                                     
                                                                                           சிங்கப்பூர்
       வந்தாய் வாழி புத்தாண்டே!

தமிழே தமிழே முத்தமிழே
                      தரணி போற்றும் தாய்த்தமிழே
அமிழ்தம் உந்தன் மொழியாகும்
                      அதுவே எங்கள் விழியாகும்
நிமிர்ந்த நெஞ்சம் யாம்பெற்று
                      நேரிய வாழ்வு வாழ்ந்திடவே
தமிழர் போற்றும் புத்தாண்டாய்
                      தையில் வந்து குடிகொண்டாய்

பட்டி தொட்டி வீடெல்லாம்
                      பாலில் சோறு பொங்கிடவே
வெட்டி வந்த செங்கரும்பும்
                      வீட்டின் முற்றம் தங்கிடவே
கட்டி வைத்த செவ்வாழை
                      காற்றில் ஆடி அசைந்திடவே
கொட்டிக் கொடுத்த இன்தமிழே
                      கோலத்தையில் நீவந்தாய்

குவித்து வைத்த நெல்மணிகள்
                      குலுக்கை எல்லாம் நிறைந்திருக்க
புவியில் உள்ளோர் உன்புகழை
                      போற்றிப் பாடி வரவேற்க
நவிழும் வார்த்தை அழகோடு
                      நாளும் உன்னைப் போற்றிடவே
செவிக்கு ஏற்ற செந்தமிழாய்
                      சிறந்ததையில் நீவந்தாய்

இருளைப் போக்கும் சூரியனை
                      இனிதே போற்றிப் புகழ்ந்திடவும்
அருளைக் கொடுக்கும் அருந்தமிழை
                      அருகே இருத்தி பாடிடவும்
விருந்து வைத்துக் கொண்டாடி
                      வெற்றிக் களிப்பால் போற்றிடவும்
விரும்பும்தையில் பிறக்கின்ற
                      வீரத் திருவே புத்தாண்டே

தமிழே உருவாய் கொண்டிங்கு
                      தையில் வந்து உதித்ததனால்
தமிழர் வாழும் நாடெல்லாம்
                      தாளம் மேளம் கொட்டியாடி
தமிழன் ஆண்டு உண்டென்று
                      தரணி எங்கும் குரலெழுப்பி
தமிழர் போற்றும் புத்தாண்டாய்
                      தையை என்றும் போற்றிடுவோம்

                                  பொன்.கணேசுகுமார்
                               சிங்கப்பூர்