ஞாயிறு, 21 ஜூன், 2020



நாள் 1 (14.05.2020)

வெள்ளை மயிலிறகு

கள்ள மில்லாப் பிள்ளை தொடங்கிக்
கருத்தில் ஆழ்ந்த பெரியோர் வரைக்கும்
உள்ளம் எல்லாம் உவகை கொள்ள
உருவம் மட்டும் ஒளியில் வெல்ல
கொள்ளை கொள்ளும் கோல மயிலின்
கொண்டை யோடு தோகை விரிப்பும்
வெள்ளை வண்ண இறகால் சூழ
            விந்தை யோடு வியப்பை நல்கும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக