ஞாயிறு, 21 ஜூன், 2020




நாள் 3 (16.05.2020)

வதந்திகள் இலவசம்

உண்மைக்கும் மேன்மைக்கும்
ஒன்றாத ஒருசெய்தி
கண்ணிமைக்கும் நேரத்தில்
கடல்தாண்டிக் கடப்பதோடு
வண்ணவண்ணக் கோலமுடன்
வான்வளியால் பறப்பதற்கும்
சின்னமனம் கொண்டவர்கள்
செய்கின்ற செயலாகும்.

அவனுக்கும் அவளுக்கும்
அந்தரங்க உறவென்பார்
இவளுக்கும் இவனுக்கும்
இடையில்தான் பிரிவென்பார்
அவனியிலே இவைபோல
அளவில்லா செய்தியென்பார்
அவர்மட்டும் பேசுகின்ற
அத்தனையும் உண்மையென்பார்.

இல்லாத செய்தியோடு
இருக்கின்ற செய்தியையும்
பொல்லாங்காய்ப் பேசுகின்ற
பொய்வேச மக்களிடம்
வில்லங்கம் ஏதுமின்றி
விவேகமுடன் வாழ்ந்தாலும்
பொல்லாத சிந்தையோடு
புறம்பேசித் திரிகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக