நாள்
31
(13.06.2020) - 2
'நுரைக்குமிழிகளில் உடைந்த கனவுகள்'
அரையாண்டு
விடுமுறையில்
அன்பான சொந்தமோடு
உறவாடி
மகிழ்வதற்கும்
ஊர்சுற்றிப் பார்ப்பதற்கும்
உறுதியான
முடிவினையே
உள்ளத்தில் கொண்டிருக்க
கறைபடிந்த
குறையாகக்
கொரோனாவும் வந்திடவே
விரைவாகப்
பறக்கின்ற
விமானங்கள் அத்தனையும்
கரைதாண்டிப்
பறக்காமல்
கடுந்தடைகள் போட்டதனால்
நிறைவேறாக்
கனவுகளாய்
நெஞ்சிருக்கும் எண்ணமெல்லாம்
நுரையெழுப்பும்
குமிழியாகி
நொறுங்கித்தான் போனதிங்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக