ஞாயிறு, 21 ஜூன், 2020




நாள் 11 (23.05.2020)

'முகமூடிக்குள் மறைந்த புன்னகை'

விரோதமுடன் கைகோர்த்து
விவேகமற்று வாழ்வதாலே
குரோதமில்லா நம்வாழ்க்கை
குத்துயிரும் குலைவுயிராய்
விராகத்தால் வீதிவந்த
வைரஸென்னும் விஷக்கிருமிக்
கொரோனாவின் கைப்பிடியில்
கொக்கரித்து நிற்குதுபார்

அகம்மூடி ஆர்பரித்த
அலங்கார தோரணையும்
சுகமற்றுப் புழங்கிட்ட
சுகாதாரக் கேடுகளும்
வகையற்றுப் போனதனால்
வழியறியா வருத்தமுடன்
முகமூடிக் கவசத்தில்
மறைந்ததெங்கள் புன்னகையும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக