நாள்
2 (15.05.2020)
ஒளி
தொடங்கும் புள்ளி
கண்மூடித்
திறக்கின்ற
கணநேரக் காத்திருப்பில்
எண்ணங்கள்
இளைப்பாற
இமையிரண்டும் ஓய்வெடுக்க
அண்டத்தில்
மிதக்கின்ற
ஆதவனின் ஒளிவெள்ளம்
வெண்புள்ளித்
தோற்றத்தில்
விரைந்திங்கு ஓடிவரும்
கண்டங்கள்
தாண்டினாலும்
காலங்கள் மாறினாலும்
விண்மேலே
உதித்தபுள்ளி
வெற்றிடங்கள் ஏதுமின்றி
மண்மீது
சூழ்ந்திருக்கும்
மையிருட்டின் திரைவிலக்க
வெண்ணூற்று
ஒளிக்கதிராய்
விரவியெங்கும் பரவிவரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக