நாள்
21
(03.06.2020)
'நீங்கள் இன்றி நாங்கள் இல்லை'
புவியில்
சிறந்து விளங்கிப்
புத்தி யோடு திகழ்ந்து
தவமாய்ப்
பெற்று வளர்த்த
தந்தை தாயைத் தொழுவேன்
புவியில்
வாழும் உயிர்கள்
புசிக்கும் உணவுப் பொருளைக்
குவிக்க
உழைக்கும் உழவர்
கரத்தை உயர்த்திப் புகழ்வேன்
கல்வி
யோடு பலவும்
கற்றுக் கொடுக்கும் குருவை
வெள்ளை
மனத்தில் வைத்து
விரும்பி வணங்கித் தொழுவேன்
நல்ல
உள்ளம் கொண்டு
நன்மை செய்யும் உறவை
வெல்லும்
வார்த்தை சொல்லி
வாழ்த்துப்
பாடி மகிழ்வேன்
செவியில்
தேனாய் விழுந்த
செழுமைத் தமிழால் என்றும்
கவிதை
யோடு கதையும்
கற்றுத் தேர்ச்சி பெறுவேன்
சுவையைக்
கூட்டும் தமிழைச்
சுலப மாகக் கற்க
நவிலும்
வார்த்தை அழகால்
நல்ல முறையி லுரைப்பேன்
ஏங்கும்
எங்கள் வாழ்வை
ஏற்றம் நிறைந்த வாழ்வாய்
ஓங்கச்
செய்த உம்மை
உலகம் உள்ள வரையில்
தீங்கு
செய்யாத் தமிழில்
தினமும் துதிக்கும் தொடராய்
நீங்கள்
இல்லை யென்றால்
நாங்கள் இல்லை யென்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக