நாள்
5
(18.05.2020)
'போன்ஸாய்'
எண்ணம்போல் உயர்கின்ற
ஏற்றமிகு வாழ்வுக்கு
வண்ணம்போல்
தூவுகின்ற
வான்மழையின் பயனோடு
மண்ணளிக்கும்
மகசூலின்
மதிப்பில்லா மகத்துவமும்
என்றென்றும்
நமக்கான
எழுச்சிநிறை உரமாகும்.
இயற்கைதந்த வளர்ச்சிதனை
இருகரத்தில் அடக்கிடவும்
செயற்கைதரும்
ரசாயனத்தால்
செய்கின்ற சூழ்ச்சியாலும்
உயரமான
மரஞ்செடியை
உரமில்லா தண்டோடு
உயரமற்ற
போன்ஸாயாய்
உருவாக்கி மகிழ்கின்றார்.
நிழலுக்கு
உதவாத
நிஜமற்ற போன்ஸாயை
அழகென்று
பெயர்சூட்டி
அடுப்படியில் வைத்தாலும்
நிலவுக்கான
நிழலென்று
நிலவறையில் வைத்தாலும்
விழலுக்கான
நீரைப்போல்
வீணாகப் போய்விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக