ஞாயிறு, 21 ஜூன், 2020






நாள் 6 (19.05.2020)

'எல்லாம் சரியாகும்'

கோரமுகக் கொரோனாவின்
கொடுக்குவந்து கொட்டியதால்
சீராளர் மெச்சுகின்ற
சிங்காரச் சிங்கையிலே
ஊரோடும் உறவோடும்
ஒன்றாகச் சேர்ந்திருந்து
தேரோட்டம் பார்ப்பதுபோல்
தெருவோரக் காட்சியில்லை

உண்பதற்கு உணவிருந்தும்
உடுப்பதற்கு உடையிருந்தும்
எண்ணத்தில் உயர்விருந்தும்
எல்லோர்க்கும் விடிவில்லை
உண்மையான உழைப்பிருந்தும்
ஊர்செல்ல இடமிருந்தும்
இன்பமான வாழ்விற்கோ
ஏற்புடைய நாளில்லை

கூறுகெட்ட கொரோனாவின்
கொடுக்கறுக்கும் நாள்வந்தால்
ஊருக்குள் நுழையாமல்
உள்ளவரும் நோகாமல்
பேருக்கும் பெருமையில்லா
பித்தலாட்ட பெருந்தொற்று
யாருக்கும் வாராமல்
எல்லாமே சரியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக