நாள்
24
(06.06.2020)
'புதைந்த நினைவுகளைத் தோண்டும் புகைப்படங்கள்'
மனத்தி
லிருந்திடும் நினைவுகளில்
மதுரை மண்டபம் நெடுஞ்சாலை
வனத்தில்
பூத்திடும் மலர்போல
வாசம் தந்திடும் புகைப்படமாய்
அரிவாள்
என்னும் ஆயுதத்தை
அழகாய்ச் செய்திடும் ஓரூராம்
திருப்பாச்
சேத்தியென் னும்பேரில்
தீரம் நிறைந்திட விளங்கிடுமே
ஆண்பெண்
இருவரும் படிக்கின்ற
அரசு மேல்நிலைப் பள்ளியுண்டு
கண்ணைப்
பனித்திடும் நினைவுகளும்
கட்டிக் கரும்பென இனிப்பதுண்டு
மதுரை
மண்டபம் சாலையிலே
மனத்துக் கினித்திடும் நண்பரோடு
புதிதாய்
வாங்கியப் படச்சுருளால்
பிடித்தோம் இத்தனை புகைப்படங்கள்
பள்ளி
மாணவர் பிடித்ததிந்தப்
பழையப் புகைப்படம் பார்க்கையிலே
துள்ளும்
இளமையின் அழகெல்லாம்
தொடர்ந்து கண்களில் தெரிகிறதே
பதின்ம
வயதிலே பதிந்தாலும்
படமாய் மனத்திலே தெரிகிறதே
இதுபோல்
இனித்திடும் புகைப்படங்கள்'
இன்னும் என்னிடம் இருக்கின்றதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக