ஞாயிறு, 21 ஜூன், 2020




நாள் 13 (26.05.2020)

'மார்சிலிங்’ இல் இராஜநாகத்தைக் கண்டவள்'

சிங்கையென்னும் நாட்டிலே - அவள்
சிறப்புடனே வாழ்பவள்
அங்கமெல்லாம் தங்கமாய் - அவள்
அழகொளிரத் திகழ்பவள்

மார்சிலிங்கில் பிறந்தவள் - அவள்
மரகதத்தை யொத்தவள்
தேர்ப்போல அசைந்துமே - அவள்
தெருவோரம் நடப்பவள்

மைவிழியைக் கொண்டவள் - அவள்
மாதுளம்பூ நிறத்தவள்
கைவளையல் குலுங்கிட - அவள்
கைவீசி நடப்பவள்

உணவுண்ட மயக்கமும் - அவள்
உடலைவிட்டுப் போக்கிட
கணவனோடு பேசியே - அவள்
காலாற நடந்தவள்

வண்ணமலர் சோலையில் - அவள்
வஞ்சமின்றிப் பேசியே
சின்னநடை நடந்தவள் - அவள்
சீறுமொலிக் கேட்டவள்

இராப்பொழுது வேளையில் - அவள்
இரைச்சலினைக் கேட்டவள்
இராஜநாக மொன்றதன் - அவள்
எழிச்சியுரு கண்டவள்

கண்டுவிட்ட கட்சியால் - அவள்
கதறியொலி செய்தவள்
கணவன்கைப் பிடித்துமே - அவள்
கவலையோடு நின்றவள்

கண்ணீரும் கரைந்திட - அவள்
கன்னத்தை நனைத்திட
எண்ணங்கள் கலைந்திட - அவள்
ஏதுமற்று நின்றவள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக